ஐ.எஸ். ஐ. எஸ். மேலைத்தேய நாடுகளின் உருவாக்கம் என அல்-அஸ்ஹரின் பிரதான இமாம் தெரிவிப்பு.

Posted by முஸ்லிம் உலகம் on Sunday, 8 March 2015 0
மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் நாடுகளை பிரித்துக் கூறுபோடும் நோக்கில் மேற்கு நாடுகளினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பே ஐ.எஸ். ஐ. எஸ். என அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின்பிரதான இமாம் கலாநிதி அஹ்மத் அல்-தையிப் தெரிவித்துள்ளார். சவூதிஅரேபியாவின் மதிவிவகார
அமைச்சருடனான சந்திப்பின் போதே செய்குல் அஸ்ஹர்  இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல்-ஸிஸீ, ஐ.எஸ். ஐ. எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு அரபுலீக் இராணுவப் படை என்ற அரபுநாடுகளின் கூட்டுப்படை ஒன்றை உருவாக்குவதற்கு அழைப்புவிடுத்திருந்தார்.ஸிஸீயின் யோசனை பற்றி அரபுலீக் நாடுகள் தற்போது ஆராய்ந்துவருவதுடன், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள அரபுலீக் உச்சி மாநாட்டில் இதற்கான முடிவு எட்டப்படவுள்ளது.

முஸ்லிம் உலகம்


புதிய செய்திகளை பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவுசெய்யுங்கள்.

Share This Post

Related News

0 comments:

Proudly Powered by Blogger.
back to top