இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.






இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமையப்பெறவுள்ளது.இப்பள்ளிவாவலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கேரளாவின்கோழிக்கோட் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள கிரன்தூர் நகரில் நடைபெற்றதுடன்,இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் பல நாடுகளைச் சேர்ந்த
இஸ்லாமிய அறிஞர்களும் கலந்துகொண்டனர்.250,000 சதுரமீற்றர் பரப்பளவில்அமைக்கப்படவுள்ள இப்பள்ளிவாசலானது, 17ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய முகலாயப் பேரரசின் அரசரான ஸஜஹான் காலத்தில் தலைநகரில் கட்டப்பட்ட பள்ளிவாசலை ஒத்தவடிவில் அமைக்கப்படவுள்ளது.500 ஏக்கர் விசலாமான மர்க்கஸ்
கல்வி நகரில் அமையப்பெறவுள்ள இப்பள்ளிவாசலுடன் இணைந்ததாக இஸ்லாமியகல்விநிலையம்,தகவல் தொழிநுட்ப மையம், மருத்துவக்கல்லூரி,பொறியியல்கல்லூரி,பாடசலைகள்,வைத்தியசலைகள்,கடைத்தொகுதிகள் உட்பட ஏனைய கல்வி நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. 'பள்ளிவாசலானது இஸ்லாத்தின் இணையற்ற சகோதரத்துவத்தையும்,ஆத்மீக ஞானத்தையும் பிரதிபலிக்கும் இடமாக அமையும்' என மர்கஸூ ஸகாபாது ஸூன்னிய்யா இஸ்லாமிய கல்விநியைத்தின் தலைவர் ஆபூபக்கர் அஹ்மத் முதலியார் தெரிவித்துள்ளார்.மேலும் இதனுடன் சேர்ந்ததாக இஸ்லாமிய ஆய்வு நூலகம் மற்றும் மாநாட்டு மண்டபவம் என்பன அமைக்கப்படவுள்ளதுடன் இதன்மூலம் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களும் வந்து தமது அறிவுத்திறனை மேம்படுத்தமுடியும் என மேலும் அவர் தெரிவித்தார்.அபூபக்கர்முதலியார் பிரபல சமூகசேவையாளராகவும், 
கல்வி நிலையங்களின்தலைவராகவும் இருப்பதுடன்,கடந்த  மூன்று  தசாப்தகாலமாக அவரது கல்விநிலையத்தில் இந்தியாவின் குஜராத் மற்றும் காஷ்மீர் பகுதிகளில்இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் உட்பட 30,000க்கு அதிமான மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கேரளாவில் அமைக்கப்படவுள்ள ஸார் இ முபராக் பெரிய பள்ளிவாசலானது 12ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கைக்கு அமைவான முகலாயப் பேரரசு காலத்தை ஒத்த 
தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளது.பள்ளிவாசலை அமைப்பதற்கு மொத்தமாக 400 மில்லியன் இந்தியரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன்,மர்க்கஸ் கல்வி நகரை முற்றாக அமைப்பதற்கு 12பில்லியன் இந்தியரூபாய்கள் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்ட பின்னர்
ஒரே நேரத்தில் 25,000 பேருக்கு தொழக்கூடிய வசதிகள் காணப்படும்.

Post a Comment

7 Comments

  1. அபூ ஸாரா5 February 2012 at 13:39

    மாஷா அல்லாஹ்... றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இஸ்லாத்தைப் பாதுகாக்கும், அவர்களின் சுன்னத்துகளைப் வளர்க்கும் ஸுன்னத்து வல் ஜமாஅத்தினர்களில் உலகளாவிய ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கும் பல தலைவர்களில் அபூபக்கர் முதலியாரும் ஒருவர். அவருக்கு அல்லாஹ் உடல் சுகத்துடன் கூடிய நீண்ட ஆயுளையும் ஈருலகில் வெற்றியையும் அளிப்பானாக.
    இந்தக் கட்டுரையில் அவர்கள் "கடந்த முப்பது தசாப்தகாலமாக" சேவை செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மூன்று தசாப்தம் என மாற்றி விடவும்.

    ReplyDelete
  2. sipaaka niraivu pera thuAA seykireen aameen

    ReplyDelete
  3. செய்தியில் சிறு திருத்தம்

    அபூபக்ர் "முதலியார்" இல்லை "முஸ்லியார்"

    "முஸ்லியார்" என்றால் மலையாள மொழியில் " மார்க்க அறிஞர்" என்று பொருள்.

    ReplyDelete
  4. INTHA PALLI VAASAL NABIYIN " THALAI MUDI " VAIPPATHARKKAHA KATTAPADA ULLATHU, INGE VAIKKAPADUM MUDI " NABIYIN THALAI MUDIYA ' ?

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்

    ReplyDelete