கிழக்கு குத்ஸ் பகுதியில் ஒரு தொகுதி சட்டவிரோத குடியிருப்புக்களை அமைக்க இஸ்ரேல் அனுமதிவழங்கியுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருதடவை '1500ற்கு அதிகமான குடியிருப்புக்களை
அமைப்பது சட்டவிரோதமானது" என்ற சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது.
இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சின் திட்டமிடல் பிரிவானது, வடகிழக்கு குத்ஸின்(ஜெரூஸலம்) பிஸ்கேட் சீவ் என்ற இடத்தில் 620குடியிருப்புக்களையும், மற்றுமொரு 900குடியிருப்புக்களை ஜெரூஸலம் நகரத்தின் தென்பகுதியான ஹர் ஹோமாவிலும் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்கால பலஸ்தீன் இராச்சியத்தின் தலைநகரம் கிழக்குகுத்ஸ் என்பது பலஸ்தீனர்களின் நோக்கமாகும். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments