ஜெர்மனின் மிகப்பெரிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை நாட்களில் ஒலிபெருக்கியினுாடாக அதானை ஒலிபரப்ப அனுமதி

 

ஜெர்மனின் மிகப்பெரும் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை நாட்களில் பகல் வேளையில் ஒலிபெருக்கியினுாடாக அதானைன ஒலிபரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஜெர்மனின் கோல்ன் நகரின் அதிகாரிகளுக்கும், அந்நகரில் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்கும் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோல்ன் நகரில் காணப்படும் அனைத்து 35 பள்ளிவாசல்களுக்கும் வெள்ளிக்கிழமை நாட்களில் நன்பகல் 12.00 மணி முதல் பி.ப. 3.00 மணிவரை 5 நிமிடங்கள் ஒலிபெருக்கியினுாடாக அதானை ஒலிபரப்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இரண்டு வருடங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கோல்ன் மத்திய பள்ளிவாசல் ஜெர்மனியின் மிகப் பெரிய பள்ளிவாசலாக காணப்படுவதுடன், இது 2018ஆம் ஆண்டு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளிவாசலானது துருக்கி அரசாங்கத்தன் மதவிவகார ஆணையகத்தின் கிளை நிறுவனமான DITIB இனால் நிறுவகிகப்பட்டு வருகின்றது. DITIB அமைப்பானது ஜெர்மனின் மிக முக்கியமான இஸ்லாமிய அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தொழுகைக்கான முஅஸ்ஸினின் அழைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டதானது மதித்து நடப்பதற்கான அடையாளமாகும் எனகோல்ன் நகரின் மேயர் ஹென்ரிட் ரேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜெர்மனில் தற்போது 45 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதோடு, நாட்டின் முதலாவது சிறுபான்மை சமூகமாக முஸ்லிம்கள் காணப்படுகின்றனர்.


Post a Comment

0 Comments