லிபியாவின் 3வது பெரியநகரான மிஸ்ராத்தாவில் லிபியாவின் அரசபடைகள் நான்கு பாரியஎண்ணெய்த்தாங்கிகளைஅழித்துள்ளன.
இதன் காரணமாக நான்கு எண்ணெய்த் தாங்கிகளும் முற்றாக தீப்பற்றுவதாக கிளர்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நகரம் இரு மாதங்களிற்கும் மேலாக கிளர்ச்சியாளர்களின்
கட்டுப்பாட்டில்உள்ளது.இங்குநெடுநாளாகஅரசபடைக்கும்,கிளர்ச்சியாளர்களிற்கும் இடையில் உக்கிரமான போர் நடைபெற்று வருகின்றது.
லிபியாவின் மேற்குப் பகுதியில் இறுதியாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளநகரம் மிஸ்ராத்தா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments