காஸாவின் குடிநீரை இஸ்ரேல் மாசுபடுத்தியுள்ளது!?








காஸாவின் குடிநீர் தொகுதியை ஒரு உள்நோக்கத்துடன் இஸ்ரேலிய இராணுவம் மாசுபடுத்தியுள்ளது.
கிணறுகள்,ஆறுகள்,குளங்கள் மேலும் முக்கியமான நீர்ப்பாசனத் தொகுதிகளின் மீதுஇவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.கடந்த திங்கட்கிழமை குடிநீரின் தரமானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 
குடிநீர் தரத்திலும் மிகக்குறைவாகக் காணப்பட்டதாக காஸாவில் உள்ள மனிதஉரிமை நிறுவனமொன்று
செய்தி வெளியிட்டிருந்தது.




உலக சுகாதார நிறுவனத்தின்(WHO)  கணிப்பீடுகளின்படி காஸாவில் விநியோகிக்கப்படுகின்ற குடிநீரீல் 95வீதமான
நீரானது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என அல்மஸீன் என்ற மனிதஉரிமை
அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.காஸாவின் நிழக்கீழ் நீர்பாசனத் திட்டங்களின் தூய்மையை கெடுத்து தவறான செயல்களில் ஈடுபடுவதாக இஸ்ரேல் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments