பலஸ்தீன காஸா பகுதியில் ஜனநாயக ஆர்ப்பட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டதாக்குதலினால் பலர் காயமடைந்துள்ளனர்.இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டினால்குறைந்தது மூண்றுபேர் காயமடைந்துள்ளதுடன், கண்ணீர் புகைத்தாக்குதலினால் மேலும் பலர் பாதிக்கப்பட்டுஉள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
என்ற பெயரில் பேஸ்புக்கில் இயங்கும் குழுவானது, பலலஸ்தீனர்களிற்கும், முழு உலகிலும் உள்ள பலஸ்தீன ஆதரவாளர்களிற்கும் பலஸ்தீன நிலத்தை மீட்பதற்காக ஜூம்மா தொழுகைகளிற்குப்பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு ஏற்கனவே மார்ச்சில் அழைப்பு விடுத்திருந்தது.
எனவே, சென்ற ஞாயிற்றுக்கிழமை 'நகபா" தினத்தை அடையாளப் படுத்தும்படியாக மேற்குக்கரை,காஸா மேலும் இஸ்ரேலின் எல்லைகளான சிரியா மற்றும் லெபனான் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் ஒன்று கூடினர். அவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலினால் பலர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும், பலஸ்தீனிற்காக எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் பிரார்திப்பதுஎம்அனைவரினதும் கடமையாகும்.
எனவே எமது அன்றாடத் தொழுகைளில் பலஸ்தீனிற்காக பிரார்திப்போம்.
0 Comments