இஸ்ரேலின் எந்த கட்சியுடனும் பேச்சுவாத்தைக்கு இடமில்லை - செய்குல் அஸ்ஹர் தெரிவிப்பு



இஸ்ரேலின் எந்த கட்சியடனும் பேச்சுவார்த்தை நடாத்த தயாரில்லை என்று,புகழ்பெற்ற சமகால இஸ்லாமியஅறிஞரும் அல்-அஸ்ஹர் பல்கலைகழகத்தின் வேந்தருமான கலாநதி அஹ்மத் அல் தைய்யிப் வலியுருத்தியுள்ளார். இதே வேளை பதவிகவிழ்க்கப்பட்ட எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு யூத மதகுருவான ஒவாதியா யூசுப் என்பவர் விடுத்த வேண்டுகோளையும் செய்க் தையிப் நிராகரித்துள்ளார்.



எகிப்தின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக, இஸ்ரேல் ஆலோசனை வழங்க முன்வந்துள்ளதையும்அவர் கண்டித்துள்ளார். இஸஸ்லாமிய உலகில் கௌரவமான பதவிகளில் ஒன்றாக செய்குல் அஸ்ஹர் என்ற பதவிநிலை காணப்படுகிறது. செய்குல் அஸ்ஹராக பதவிவகித்த உலக புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் கலாநிதி சைய்யித் முஹம்மத் அல் தன்தாவி காலஞ் சென்றதை அடுத்து அவரது இடத்திற்கு
கலாநிதி அஹ்மத் அல் தையிப் 2010ம் ஆண்டில் ஹுஸ்னி முபாரக்கினால் நியமிக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments