பலஸ்தீன உறவுகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.







ரபா எல்லையை எகிப்து நிரந்தரமாகத் திறக்கவுள்ளது.




எகிப்தையும்,பலஸ்தீனின் காஸா பகுதியையும் இணைக்கும் ரபா எல்லை சனிக்கிழமை முதல்நிரந்தரமாகத் திறக்கப்படவுள்ளது. எகிப்து இராணுவத்தை மேற்கோள்காட்டி,இதனை எகிப்தின் உத்தியோகபூர்வ செய்தித்தாபனம் வெளியிட்டுள்ளது. நான்கு வருடங்களாக இவ் எல்லையானது
மூடப்பட்டு இருநதது. சனிக்கிழமை ,இவ் எல்லை ஒவ்வொரு நாளும் காலை 9மணி முதல் இரவு 9மணி வரையிலும் வெள்ளிக்கிழமை 
 மற்றும் விடுமுறைதினங்களிலும் திறக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச் செய்தியை ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.


ஆனாலும்,இப்பாதையினூடாகப் பயணிக்க சில வரையரைகள் விதிக்கப்பட்டுள்ளன. எகிப்தில் நுழைவதற்கு 18 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்களுக்கு மாத்திரமே இந்த மட்டுப்பாடுகள் பொருந்தும்.

Post a Comment

0 Comments