சிரியாவில் பல உயிர்இழப்புக்கள்.




சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிரான ஊர்வலம் ஒன்றின் போது 30ற்கும் அதிகமான மக்கள்
கொல்லப்பட்டுள்ளனர். ஹோம்ஸ் நகரில் குறைந்தது 16பேரும், ஹமா நகரில் 6பேரும் 


மேலும்; ஜப்லீஹ் நகரில் 2பேரும் கொல்லப்பட்டுள்ளதாக, இஹ்ஸான் எனும் மனிதஉரிமை
அமைப்பு தெரிவித்துள்ளது.


மேலும் பாதுகாப்புப்படையினர் டியர் அல்ஸுர்
நகரில் 4ஆர்ப்பாட்டக்காரர்களை கொண்றுள்ளதாக 'ரோய்டர்" செய்தித்தாபனத்திற்கு உள்நாட்டு ஆர்பாட்டக்குழு ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.கடந்தவாரம் 1000ற்கும்
அதிகமான மக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இதேவேளை வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிரியாவில் மனிதஉரிமை நடவடிக்கைகளை கண்காணிக்க தமது அதிகாரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments