ஹமாஸ் அமைப்புடன் ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைக்க உடன்பட்டுள்ளதாக பதாஹ் அமைப்பின்
உயர்மட்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளர். இம்முடிவில் தாம் உறுதியாக இருப்பதாவும் அவர்
தெரிவித்துள்ளார். இவ் உடன்படிக்கையை அமெரிக்காவும்இஸ்ரேலும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
பதாஹ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி நபீல் சஹாதிற்கும் பலஸ்தீன பிரதமர் இஸ்மாயீல் ஹானியாவிற்கும் காஸாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இம்முடிவு
எட்டப்பட்டுள்ளது.
இரண்டு எதிர் குழுக்களான பதாஹ்வுமஹமாஸும் தற்காலிக ஜக்கிய அரசாங்கத்தை ஜூன்மாதம் முதல்
அமைப்பதற்கு உடன்பட்டுள்ளன.மேலும் 'இஸ்ரேலிற்கு சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை' என
இப் பேச்சுவாhத்தையின் பின் செய்தியாளர் மகாநாட்டில் நபீல் சஹாத் தெரிவித்தார்.இவ் உடன்படிக்கையின் படி காஸா மற்றும் மேற்குக்கரைகளில் உள்ள சிறைக் கைதிகளை ஒரு வருடத்திற்குள்
விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments