சிரியா கிளர்ச்சியின் பின்னணியில் லெபனான் ஸலபிகள்.





அண்மைக்காலமாக சிரியாவில் ஏற்பட்டுள்ள கிளாச்சியில் ஈடுபட்டுவருகின்ற அல்-முஸ்தக்பால் கட்சியுடன் ஸலபிய 
பயங்கரவாதிகளும் ஸலபிய தத்துவத்துவங்களுடன் செயற்படுகின்ற நாடுகளும் நேரடியாக 
தொடர்புபட்டுள்ளதாக சரியாவின் உள்நாட்டடு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


வட லெபனானில் உள்ள ஸலபிகளை அல்-முஸ்தக்பால் கட்சியின் சட்ட அமைப்பாளரான காலித் அல் தஹ்ர் 
மற்றும் அவரின் சகோதரரான ராபியும் வழிநடத்துகின்றனர்.இவர்கள் அமெரிக்க பின்னனியில் செயற்படும் அல்-முஸ்தக்பால் கட்சியிலுள்ளவர்களுடனும் லெபனானில் பரவலாக ஸுன்னிகள் வாழும் பிரதேசமான திரிப்போலியில்ஸலபியச்  சிந்தனையைப்பரப்புகின்றவர்களுடன் தொடர்புபட்டுள்ளனர்.என அவ் ஊடகம் செய்தி வெளியுட்டுள்ளது.


சிரிய எல்லைப்புறமான அல் ஹஜ்னா எனும் இடத்தில் உள்ள காவல்நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அங்கிருந்து மூண்றுபேரை கடத்திச் சென்றுள்ளதாகவும் 
லெபனானிய ஸலபிய அமைப்பின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


முஸ்தக்பால் கட்சியின் வழிநடத்துவர்களும் அதன் தலமைப்பொறுப்பிலுள்ளவர்களும் வட லெபனானில் உள்ள பதாஹ் அல்-இஸ்லாம் மிலிடிய்யா என்ற அல்-குவைதாவுடன் தொடர்புடைய அமைப்புக்கு ஆயுதங்களையும் கையடக்கத்தொலைபேசிகளையும் வநியோகித்துள்ளனர்.


இதே நேரம் வட லெபனான் பரந்தளவில் ஸலபிய அமைப்புக்களை கொண்டுள்ளது. இவை வட சிரியாவில் உள்ள பயந்கரவாதிகளிற்கு அடைக்கலம் அளிக்க முன்வந்துள்ளன.மேலும் இப்பகுதியிலுள்ள
ஸலபிய மஸ்ஜிதுகள் ஆயுத சேமிப்பிடமாக மாறியிருக்கின்றன என்று அவ்ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments