சவூதி அரேபியா,மத்தியகிழக்கு மற்றும் வடஆபிரிக்க எழுச்சிகளை நாடிச்செல்கின்றது.





மத்தியகிழக்கு மற்றும் வடஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள புரட்சிகளையும்,எழுச்சிகளையும் நிதிஉதவி மற்றும் ராஜதந்திரம் போன்றவற்றை பயன்படுத்தி சவூதி அரேபியா தடுக்கப் பர்ப்பதாக செய்திகள் 
தெரிவிக்கின்றன. மேலும் சவூதிஅரேபியா,யெமனிய ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிகை பதவி விலகத்தூண்ட முயற்சிப்பதாகவும்,எகிப்திற்கு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக 
வழங்கியுள்ளதாகவும் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.




ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட பாரசீக வளைகுடா கூட்டுறவு சங்கம் ({P}GCC) என்ற அமைப்பை உருவாக்கி,பிராந்தியத்திலுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமையைக் கொண்டுவர,மோரோக்கொ மற்றும் ஜேர்த்தானிற்கு சவூதி அழைப்பு விடுத்துள்ளதுள்ளது. கடந்த மாhச் மாதம் 14ம் திகதி பஹ்ரைனின் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களை அடக்க,சவூதி ஒரு படையை பஹ்ரைனிக்கு அனுப்பியது.




அரபுலகு அனைத்திலும் கிளர்ச்சிகளும்,புரட்சிகளும் ஏற்பட்டு,அதனால் தமது நாட்டிலும் புரட்சியொன்றுஏற்படும். என சவூதி அரேபியா பயப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



Post a Comment

0 Comments