இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலினால் கோலன் குன்றுப் பிரதேசத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.





ஸியோனிஸ இராணுவத்தின் தாக்குதலினால் 20 பலஸ்தீனியääசிரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் 
கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் 277 பேர் காயம்டைந்துள்ளனா.சம்பவம் நடைபெற்ற கோலன் குன்றுப் பிரதேசமானது 1967ம் ஆண்டு ஸியோனிஸ இராணுவத்துக்கும்,சிரியப் படைகளிற்கும் இடையில்
நடைபெற்ற ஆறு நாள் யுத்தத்தின் போது,ஸியோனிஸ இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பிரதேசமாகும்.
சிரியாவின் எல்லைப் பகுதியில்,இஸ்ரேலிய பாதுகாப்பு வேலிகளுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதே இத்தாக்குதல் நடாத்தப்பட்டது.








1948ம் ஆண்டு நடந்த யுத்தத்தின் ஸியோனிஸ இராணுவம் வீடுகளை அழித்து,மக்களை அகதிகளாக 
மாற்றியது. மூண்று வாரங்களுக்கு முன்பாக, இதே போன்ற அநியாயத்தை ஸியோனிஸ இராணுவம் மேற்கொண்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பலஸ்தீன கொடிகளைச் சுமந்து கொண்டு,பாதுகாப்பு வேலிக்கு
அப்பால் கற்களை வீசி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாதுகாப்பு வேலிகளுக்கு அண்மையாக வருபவர்களை கொல்வதாக இஸ்ரேலிய இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதாக,சிரிய
பிரஜை ஒருவர் செய்திநிறுவனமொன்றுக்கு கருத்துதெரிவித்தார்.

Post a Comment

0 Comments