அறபு நாடுகளில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கையானது,2011ம் ஆண்டின் முதலாம் கால்ஆண்டின் முடிவில் 27.7மில்லியன் தொகையை அடைந்துள்ளது.இது இவ்வருட ஆரம்பத்தில் இருந்து
30வீத அதிகரிப்பாகும்.என அராபிய சமூக ஊடகக் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.மேலும் மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பாவனைகள் கணிசமான அளவு அதிகரித்து
உள்ளதாக,இரண்டாவது முறையாக இக்கருத்துக்கணிப்பை மேற்கொண்ட துபாயின் அரசபாடசாலை செய்தி வெளியிட்டுள்ளது.அண்மைக்காலமாக அரபுலகில் ஏற்பட்டுவரும் எழுச்சியே இப்பாவனை வளர்ச்சிக்கான முக்கியகாரணம் என அவ் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.குடியியல் மற்றும் அரசியல்நடவடிக்கைளிக்குமே இச்சமூக ஊடங்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதே நேரம்,ஏறத்தாள 1.1மில்லியன் டுவிட்டர் பாவனையாளர்கள்,குறைந்தது ஒவ்வொரு இருகிழமை காலப்பகுதியில் குறுஞ்செய்திகளை பரிமாறுகின்றனர். இந்த டுவிட்டர் பாவனையாளர்கள்
2011ம் ஆண்டின் காலண்டுப்பகுதியில் ஏறத்தாள 22.7மில்லியன் குறுஞ் செய்திகளைப் பரிமாறியுள்ளனர்.
'எகிப்து', 'ஜனவரி 25', 'லிபியா', 'பஹ்ரைன்' மற்றும் 'ஆப்பாட்டம்' போன்ற சொற்கள், இக்காலப்
பகுதியில் டுவிட்டர் பாவனையாளர்களால் அதிகம் பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகள் ஆகும்.
அரபுலகில் ஜக்கிய அரபு இராச்சியம்,கட்டார்,குவைட்,பஹ்ரைன் மற்றும் லெபனான் போன்ற நாடுகள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக இணையதளங்களை அதிகமாகப் பயன்படுத்தும் பாவனையாளர்களைக் கொண்டுள்ளன.அரபு நாடுகளில்,எகிப்தில் இவ்வருடக்காலண்டில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக அதிகரித்துள்ளது. எகிப்தில் ஏறத்தாள இரண்டுமில்லியன்பாவனையாளர்கள் இவ்வருடக்காலண்டில் பேஸ்புக்கில் இணைந்துகொண்டுள்ளனர்.
0 Comments