டியூ னிசிய ஜனாதிபதி பின் அலிக்கும்,அவரது மனைவிக்கும் 35வருட சிறைத்தண்டனையை அந்நாட்டு நீதி மன்றம் வழங்கியுள்ளது. பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது முன்வக்கப்பட்டிருந்தன. இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நீருபிக்கப்பட்ட பின்னர் இவர்களுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.
பின் அலி சார்பாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.பின் அலியும் அவரது குடும்பத்தினரும்,டியூனிசியாவின் மக்கள் புரட்சியின் போது நாட்டைவிட்டு வெளியேறி சவூதிக்கு சென்றனர்.தற்போதும் அவர்கள் சவூதியிலே வசிக்கின்றனர்.
பின் அலியின் வாசஸ்தளத்தில் இருந்து பெருந்தொகையான பணமும், ஆபரணங்களும், பழங்கால சொத்துக்களும் கைப்பற்றப்பட்டதாக அரசதரப்பு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். பின்அலிக்கு 36மில்லியன் அமெரிக்கடொலர்களும்,அவரது மனைவிக்கு 30 அமெரிக்கடொலர்களும் தண்டமாகச் செலுத்தமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.மேலும் மற்றுமோர் தேடுதல் நடவடிக்கையின் போது கர்தேஜ் பகுதியிலுள்ள, ஜனாதிபதி பின் அலியின் வீட்டில் ஆயுதங்களும், போதைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டள்ளது.
பின் அலி தனது 23வருட ஆட்சிக்காலத்தின் போது, பாதுகாப்புத் துறையைப் பயனபடுத்தி மனிதஉரிமை துஷ்பிரயோகங்களிலும், பல்வேறு ஊழல்களிலும் ஈடுபட்டுள்ளதாக மக்கள்சர்பாக ஆஜரான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளர். மேலதிக விசாரணைக்காக இவ்வழக்கு ஜூன்மாதம் 30ம்திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Comments