யெமனின் தலைநகர் ஸனா உட்பட பலநகரங்களில் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் அரசபடைகளிற்கும் கிளர்ச்சியாளர்களிற்கும் இடையில் பாரிய சண்டைகள் நடைபெற்றுவருகின்றன.
நேற்று நள்ளிரவுநேரத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலையிலும் டாய்ஸ் நகரின் சுதந்திரசதுக்கத்திற்கு அருகிலும் மற்றும் ஜனாதிபதி வசிக்கும் பிரதேசத்திலும் இரு தரப்பினர்களிற்கும்இடையில் பாரிய மோதல்கள் தொடங்கியுள்ளன.
கடந்த புதன்கிழமை ஸனா நகரில் நடந்க பெரிய அளவிளான மோதல்களில் குறைந்து 41ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.யெமனின் பல நகரங்களில் ஜனாதிபதி ஸாலிஹிற்கு எதிராக நடாத்தப்பட்ட பெரிய ஊர்வலங்களின் போதே அதிக மக்கள் கொல்லப்பட்னர்.முப்பது ஆண்டுகளிற்கும்
அதிகமாக ஸாலிஹ் ஜனாதிபதியாக இருக்கிறார்.
மேலும் ஸாலிஹ் பதவியை நிலையாக வைத்துக்கொள்ள யெமனில் உள்நாட்டு போர் ஒன்றை ஏற்படுத்த முயற்சி செய்வதாக எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
0 Comments