காங்கிரஸ் ஒபமாவின்மீது அதிருப்த்தி!!!






அமெரிக்கப் சடடமன்றத்தின்(காங்கிரஸ்) கீழ்நிலை உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் லிபியாவின் மீது போரைத் தொடர்ந்ததிற்கு காங்கிரஸ் ஒபாமவை விமர்சித்துள்ளது.வெள்ளிக்கிழமையன்று
அமெரிக்க சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில், லிபியா மீது எடுக்கப்பட்ட முடிவானது பிழையான அணுகுமுறையாகும்.என்று ஓர் கூட்டுத்தீர்மானத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.


ஐ.நா.வின் தீர்மானத்தின்படியும்,காங்கிரஸின் குறைவான ஆதரவுடனும் லிபியாவின் மீது விமாணத் தாக்குதல்களை நடாத்த ஒபாமா மார்ச் மாதம் கட்டளையிட்டார்.சட்டமன்றத்திற்கே போரை
பிரகடணம் செய்வதற்கான உரிமையிருப்பதாக அமெரிக்க அரசியலமைப்பு கூறுகின்றது.


'லிபியாவின் மீது போர்த்தொடுக்க ஐ.நா.விற்கு அணுமதிவழங்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியது ஆத்திரமூட்டுவதும் பிழையான செயலுமாகும். இதில் நாம் உண்மையாகவும்,உறுதியுடனும்
இருக்கிறோம்.'என்று குடியரசுக்கட்சியின் சட்டத்தரனியான ஜேஸன் ஸபிட் குறிப்பிட்டார்.
ஈராக்,ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா மீதான அதிக செலவான இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நேரங்களில்,அமெரிக்கா பொருளாதாரத்தில் ஆபத்தான நிலமையில் காணப்பட்டதாக
சட்டமன்ற உறுப்பினர்கள் செய்திவெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments