இஸ்ரேலுடன் ஐக்கியமாகநடப்பதற்கு எகிப்தின் உலமாக்கள் எதிர்ப்பு.






இஸ்ரேலுடன் எந்தவொரு முஸ்லிமும் ஐக்கியத்துடன் நடந்தகொள்ள வேண்டாம்.என எகிப்தின்
சிரேஷ்ட உலமா ஒருவராகிய ஜமாலுத்தீன் குதுப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலை அங்கீகரிக்க முடியாது.
என்ற தமது கருத்துடன்எகிப்தும் உறுதியாக இருக்கும் என்று ஈரான் வெளியிட்ட கருத்துடன் 
உடன்படும்படியாக இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.




'பலஸ்தீன மக்கள் மீது பாரிய கொடுமைகளை இஸ்ரேல் மேற்கொண்டுவருகிறது.இதனால் முழு முஸ்லிம்
சமூகத்தினதும் வெறுப்புக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளது.54 நாடுகளில் முஸ்லிம்கள் பெருன்பான்மையாக 
வாழ்கிறார்கள்,அவர்கள் பலத்துடன் வாழவேண்டும்.மேலும் இஸ்ரேல்,பலஸ்தீனமக்களுக்கு அநியாயங்கள்இழைத்துவருவதனால், உலகில் வாழும் 150 கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வெறுபபுக்கு
இஸ்ரேல் ஆளாகியுள்ளது'.என்று கைரோ நகரில் சென்ற வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை நடாத்தியவரும், அல்-அஸ்கர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட அறிஞருமாகிய
ஜமாலுத்தீன் குதுப் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments