பஹ்ரைன் புரட்சிபற்றிய செய்திகளை நேரடியாக லுழூதொலைக்காட்சி சேவை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது.


                 



லுழூ தொலைக்காட்சி சேவை நிறுவனம்,அதன் ஒளிபரப்பை திங்கட்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது.ஏற்கவே இத்தெலைக்காட்சிச்சேவை அமைந்திருந்த லுழூசுற்றுவட்ட பிரதேசமானது மாhச்மாதம் ஆரம்பப்குதியில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சவூதியின் கூலிப்படையினர் தாக்குதல்களை ஆரம்பித்த போது பஹ்ரைனிய அதிகாரிகளால் அழிக்கப்பட்து.


இதேவேளைஏறத்தாள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை, பஹ்ரைனிய அதிகாரிகள் தலைநகரம் மனாமாவில் அரசியல் காரணங்களிற்காக தடுத்து வைத்துள்ளதாக பஹ்ரைனின் மத்திய மனிதஉரிமை 
அமைப்பு கருத்துவெளியிட்டுள்ளது.


பெப்ரவரிமாதம் நடுப்பகுதி முதல்,வம்சஆட்சியாக நடைபெறும் கலிபா முறையை ஒழிக்குமாறுகோரிஆயிரத்துக்கும் அதிகமான ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத்தொடங்கினர்.


மார்ச் மாதம் 2ம் திகதி சவூதி அரேபியப் படைகள் பஹ்ரைனில் நாடு பூராகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரட்சியை கட்டுப்படுத்துவதற்காக,பாரசீக வளைகுடாவில்அமைந்திருக்கும் தலைநகர் மனாமாவை வந்தடைந்தனர்.மேலும் பஹ்ரைன்,சவூதிப் படைகள் 
ஊடகவியலாளர்கள்,ஆசிரியர்கள்,வைத்தியர்கள்,தாதிக ள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்கருத்துக் கொண்டிருப்பவர்கள் போன்ற பல்வேறு தரப்பட்ட மக்களைக் கடத்தியவுடன்,12ற்கு மேற்பட்ட
பள்ளிவாசல்களை அழித்தனர்.


மேலும் அவர்கள்;மனித உரிமை அமைப்பின் அங்கத்தவர்கள்,அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் 
குடும்ப உறுப்பினவர்கள் முதலானவர்களை கைதுசெய்து சிறைகளிலில் அடைத்தது மட்டுமல்லாமல்அவர்களை துன்புறுத்தினர். இப்படியாகக் கைதுசெய்யப்பட்டவர்கள் எங்குவைக்கப்பட்டுள்ளார்கள்என்பது இன்னும் அறியப்படவில்லை.

Post a Comment

0 Comments