அமெரிக்க போர்விமாணஙகள் ஆப்கானிஸ்தானிய எல்லைப்பகுதியில் உள்ள பாகிஸ்தானிய பழங்குடியினர்வாழும் பிரதேசத்தில் நச்சு இரசாயண குண்டுகளால் தாக்குதல் நடாத்துவதாக பாகிஸ்தானிய
மருத்துவர்களும்,அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். வடமேற்குப் பாகிஸ்தானில் அமெரிக்கப் போர் விமாணங்கள் தாக்குதலிற்கு பயன்படுத்தும் ஏவுகணைகளில் மரணத்தை ஏற்படுத்தும் நச்சு இரசாயணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பகுதியில் நடாத்தப்பட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தோல் நோய்கள்,கண்நோய்கள் மற்றும் வேறுபல நோய்களினாலும் அவதிப்படுவதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.
அமெரிக்க விமாணங்கள் முன்னெடுத்துச் செல்லும்,இத்தாக்குதல்களின் காரணமாகஅப்பபகுதியில் வசிக்கும் பொது மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களும், வளர்ப்புப் பிராணிகளும்
மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களினால் சிறுபிள்ளைகள் பல நோய்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.இவ் இரசாயணக்குண்டுகளால் பாதிக்கபட்ட 28மாதக் குழந்தையொன்று இரத்தப்புற்றுநோய்,தோல்நோய் என்பவற்றால் பாததிக்கப்பட்டு மரணமடைந்தாக இப்பகுதியில் வசிக்கும்ஒருவர் செய்தி நிறுவனமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு முதல்,பாகிஸ்தானில் அமெரிக்கவிமாணங்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களினால்,இதுவரை பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் உள்நாட்டு செய்தியயொன்று தெரிவிக்கின்றது.
0 Comments