பல்லாயிரக்கணக்கான ஜோர்த்தானிய மக்கள்,ஊழலை ஒழிக்குமாறும் மற்றும் ஆட்சியில் புதிய சீர்த்திருத்தங்களைக் கொண்டுவருமாறும்கோரி வீதிகளில் இறங்கி அரசாங்கத்திக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.மேலும் பிரதமர் மரூத் பாகித்தின் அரசாங்கம் பதவிவிலகி புதிய தேர்தல் ஒன்றை நடாத்துமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அந்நாட்டு மன்னர்அப்துல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி,பிரதமர் மரூத் நாட்டில் அரசியலிலும் பொருளாதாரத்திலும் புதிய சீர்திருத்தங்களை கொண்டுவருவதை தடைசெய்திருப்பதாக ஜோர்த்தானிய மக்கள் தெரிவிக்கின்றனர்.நேற்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர்,ஜனநாயாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அம்மான் நகரில்கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஜோர்த்தானின் உள்நாட்டு விவகாரங்களில் பாதுகாப்பு நீதிமன்றம் தலையிடுவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்துள்ளதோடு அந்நீதிமன்றத்தை கலைக்க வேண்டுமென்றும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
மேலும் இஸ்ரேலுடன்,ஜோர்த்தானுக்குள்ள தொடர்பை முடிவிக்குக் கொண்டுவருமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 'இந்நீதிமன்றமானது எதிர்க்கட்சிகளை அடக்கிவைத்துள்ளது.ஜோர்த்தானிய மக்கள் அனைவரும் பலஸ்தீன் சுதந்திரமடைய வேண்டும்.என விரும்புகின்றனர்,அவர்கள் ஸியோனிஸ எதிரிகளை எதிர்த்து நிற்கின்றனர்.' என தொழில்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 Comments