பெரும்பான்மையான அமெரிக்க மக்கள்,அமெரிக்கா லிபியாவின் மீது மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்கள் இவ்விடயத்தில்அரசியல்கட்சி வேறுபாடின்றி ஒன்றினைந்துள்ளனர்.என அண்மைக்காலக் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. பத்தில் ஆறு அமெரிக்க ஜனநாயக்கட்சி உறுப்பினர்கள்,குடியரசுக்கட்சியினர், சுதந்திரக்கட்சியினர் போன்றோர்,லிபியா மீது நடாத்தப்படும் போரில் அமெரிக்கா பங்குபற்றக்கூடாது எனக் கருதுகின்றனர்.60வீதமான அமெரிக்கமக்கள் லிபியா மீது நடாத்தப்படும் போரை எதிர்க்கின்றனர். 30வீதமான மக்களே, தமது நாடு வடஆபிரிக்க நாடுடன் சரியானமுறையில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நினைக்கின்றனர்.என அண்மையில் சீ.பீ.எஸ். செய்தி நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா,அமெரிக்க சட்ட சபையின் கிழ்நிலை உறுப்பினர்களின் அனுமதியின்றியே லிபியா மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கினார்.
லிபியாவில் நேட்டோ படையினர்,கடந்த பத்து கிழமைகளில் மேற்கொண்ட தாக்குதல்களினால் இதுவரை 718 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 4000ற்கும் அதிமானவர்கள்காயமடைந்துமுள்ளதாக, லிபியாவின் அரசாங்கப் பேச்சாளர் மூஸா இப்ராஹீம தெரிவித்துள்ளார்.
லிபியாவில் கடாபியின் படைகளுக்கும் அரச எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில்கடந்த பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் இருந்து போர் நடைபெற்றுவருகின்றது.
0 Comments