இஸ்ரேலானது காஸாவை திட்டமிட்டு சீர்கெடுத்தியுள்ளது.


                                             




இஸ்ரேலானது,காஸாவைச் சுற்றியுள்ள பகுதிகளை முற்றுகையிட்டதன் மூலம் காஸாவில் திட்டமிட்டு வறுமைநிலையை ஏற்படுத்தியதாக,பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் காஸாவில் 2010ம் ஆண்டு இறுதியில் வேலையற்றோரின் எண்ணிக்கை 45.2வீதமாக கணப்பட்டதாகவும், வேலையற்றோரின் தொகை முதலாம் அரையாண்டுப் காலப்பகுதி முதல் அதிகரித்துவருவதாகவும் அவ்வமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.


2007ம் ஆண்டில் பலஸ்தீனில் நடந்த ஜனநாயகத்தேர்தலில் ஹமாஸ் அமைப்பு வெற்றி பெற்று,ஆட்சி நிர்வாகத்தில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டது.இக்காலப்பகுதியிலே இஸ்ரேல் பலஸ்தீன சில நிலப்பரப்புக்களை முற்றுகையிட்டு காஸாவில் மோசமான வறுமைநிலையை உருவாக்கத்தொடங்கினர்.


இம்முற்றுகை மூலம் போக்குவரத்து தடைப்பட்டது. இதன்விளைவாக பலஸ்தீன மக்களின் பொருளாதார நிலமைகள்பாதிக்கப்பட்டு அவர்கள் வறுமைநிலைக்குத் தள்ளப்பட்டனர்,இதனால் ஏறத்தாள 1.8மில்லியன் பலஸ்தீனமக்கள் வீடுகளில் அடைபட்டு இருந்தனர்.என செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments