ஈரான் இஸ்லாமியக் குடியரசானது,தனது இரண்டாவது செய்மதியை கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ளது.ரசாத் எனப்பெயரிடப்பட்டுள்ள இச்செய்மதியானது முதன்முதலாக உள்நாட்டு சாதனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாகும். 13.5கிலோகிராம் எடைகொண்ட இச்செய்மதியானது மைக்ரோசெய்மதி வகையைச் சேர்ந்தது.ஆனாலும் இது பெரியசெய்மதியில் உள்ள எல்லாஅம்சங்களையும்கொண்டுள்ளது.இதன்வடிவமைப்பு,உற்பத்தி,
பொருத்தல், சோதனை போன்றன உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்செய்மதியானது புவியில் இருந்து 260கிலோமீட்டர் உயரத்தில் பூமியை வலம்வரும்,மேலும் இதுஒவ்வொரு நாளும் 15தடவைகள்பூமியை வலம்வருமென எதிர்பாக்கப்படுகின்றது.புவிமேற்பரப்பை படம்பிடித்து அவற்றை புவயிலுள்ள செய்மதி நிலையத்திக்கு அனுப்புவதுடன்,ரேடியோ தகவல்களை புவிக்கு அனுப்புவது இதன் நோக்கமாகும்.இச்செய்மதியானது அதனுடன் பொருத்தப்பட்டள்ள சூரிய கலங்களைப் பயன்படுத்தி,சூரிய சக்தியில்இயங்கும். ஈரானால் 2009 இல் ஏவப்பட்ட முதலாவதுசெய்மதியானது ஒன்பது நாடுகளின் கூட்டுத் தயாரிப்பாகும்.ஈரானானது தனது முதலாவது விண்வெளியூர்தியை 2019ம் ஆண்டு அனுப்பத்திட்டமிட்டுள்ளது.
0 Comments