ஒருவருடத்தில் தற்கொலை செய்துகொள்ளும் அமெரிக்க இராணுவவீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.2011 மே மாதம்,தொடர்ந்து கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கம் அமெரிக்க இராணுவவீரர்களிடையே பலதற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது . மே மாதம் 21தறகொலைச் சம்பவம்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இப்புள்ளிவிபரங்களை பெண்டகன் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இராணுவவீரர்கள் இப்படியாக தற்கொலை செய்வதுகொள்வதற்கான காரணத்தை தேடுவது கடினமாகவுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இராணுவவீரர்களை ஒரே வேலைகளில் திரும்பத்திரும்ப ஈடுபடுத்துவதால், அவர்கள் மனஅழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். என்பது இதற்கு ஓர் காரணமாக இருக்க முடியும்.என ஊகிக்கப்படுகின்றது.
"இராணுவவீரர்கள்,கடற்படைவீரர்கள் சிறு ஓய்வுகளிற்கு பின், வெவ்வேறு இடங்களிற்கு சென்று அவர்களின் கடமை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.இதனால் அவர்கள் உளரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர், மேலும் ஈராக்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஒரே கடமைகளில் திரும்பத்திரும்ப ஈடுபடுத்தப்படுவதானால் அவர்கள் விரக்திநிலையடைகின்றனர்".என வைத்தியர் ஒருவர் செய்தநிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான்,ஈராக் போன்ற நாடுகளில் இராணுவவீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தமே,இத்தற்கொலைகளுக்கு முக்கியகாரணம் என அமெரிக்க இராணுவம் தெரிவிக்கின்றது.
0 Comments