புதிய ஒட்டோமன் பேரரசு? (உஸ்மானிய கிலாபத்)







அண்மையில் துருக்கியில் நடைபெற்ற தேர்தலில்,பிரதமர் எடோகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமானகட்சி அமோக வெற்றிபெற்றது.மேலும் இக்கட்சி பாரளுமன்றத்தில் 326 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஆனாலும்,இத்தொகையானது அரசியலமைப்பை மாற்றப்போதுமான அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவில்லை. முப்பது வருடங்களக்கு முன் எழுதப்பட்ட,  அரசியல் அமைப்பு மாற்றப்படவேண்டுமென துருக்கி மக்கள் விரும்புகின்றனர். எனவே பிரதமர் எடோகான் எதிர்கட்சிகளிக்கு அரசாங்கத்துடன் இணைந்துசெயற்படுமாறு அழைப்புவிடுத்துள்ளனர். அரசியலமைப்பை மாற்றவேண்டுமெனில் 367ஆசனங்களைப் பெறவேண்டியுள்ளது. பிரதமர் எடேகானின் 3வது தடவையாக ஆட்சியமைப்பதற்கு தகுதி பெற்றுள்ளது. பொதுவாக உலகஅளவில் தொடர்ந்து ஆட்சிசெய்யும் அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படும்,எனினும் பிரதமர் எடேகானின் கட்சி 3வது முறையாக பாரிய வெற்றியீட்டியுள்ளது,முக்கியமானவிடயமாகும்.




துருக்கியானது தற்போது உலகஅளவில்,பொருளாதாரத்தில் மிகவேகமாக வளாந்துவருகின்றது.இன்னும்பலவழிகளில் வல்லரசாகவும்,பிராந்தியத்தில் அதிகாரமிக்க நாடாகவும் மாறிவருகின்றது.ஜீ 20 நாடுகளில் சீனாவுக்கு அடுத்தாக,துருக்கி காணப்படுகின்றது.உலகில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளில் 16வது நாடாக துருக்கி காணப்படுகின்றது. சிறந்தவெளியுறவுக்கொள்கையை துருக்கி கொண்டுள்ளது.சிரியாவில் நடக்கும் புரட்சியினால் பல மக்கள் அயல்நாடான துருக்கியில் தஞ்சமடைகின்றனர்,"இம்மக்கள் தம்நாட்டில் குடியேறுவதனால் தமக்கு பாதிப்பில்லை" எனத்துருக்கி பிரதமர் தெரிவித்திருந்தார்.இதனால் துருக்கியின் பொருளாதாராத்தில் பாதிப்புஏற்படாது.என்பது புலனாகின்றது.சென்றவருடம் காஸாவிற்கு உதவிப்பொருட்களை ஏற்றிச்சென்ற துருக்கியின் கப்பலின் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டதால்,அக்கப்பபில் இருந்த 19ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.இதனை பிரதமர் எடோகான் வன்மையாகாக் கண்டித்ததுடன்,இஸ்ரேல் இதற்கு நஷ்டஈடு வழங்கவெண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார், மேலும் இஸ்ரேலினை அவர் வன்மையாக எதிர்த்துவருகிறார்.










                             


துருக்கி,ஈரான் இரு நாடுகளிக்குமிடையில் 2011ஜனவரியில் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.மேலும் துருக்கியானது முஸ்லிம்நாடுகளுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைகடந்த சிலவருடங்களாக அதிகளவில் பேணிவருகின்றதாக,துருக்கியின் உள்நாட்டு செய்தியொன்று தெரிவிக்கின்றது. துருக்கியின் புதிய அரசாங்கம், இஸ்லாமிய ஆட்சியை நடைமுறைப்படுத்தி மீண்டுமொரு புதிய ஒட்டோமன் பேரரசை (உஸ்மானிய கிலாபத்) தோற்றுவிக்கும்.என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  

Post a Comment

0 Comments