தன்நிகரில்லா இஸ்லாமியக்கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு வருகின்றது.



                   


உலகின் முதலாவது பூகோள இஸ்லாமிய வரலாற்றுககலைக் களஞ்சியம் உருவாக்கப்பட்டுவருகின்றது. இவ் வரலாற்றுக் கலைக்களஞ்சியம் ஹஜ்,மக்கா,மஸ்ஜிதுல் ஹரம்,மதீனாவில் உள்ள நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்களைக்களஞ்சியத்தை உருவாக்குவதில், ஹஜ் ஆய்வுநிறுவனம் மற்றும் ஆய்வுக்கும், ஆவணக்காப்பகத்துக்குமான மன்னர் அப்துல்அஸீஸ் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது.




"ஹஜ்,மக்கா மற்றும் இரு புனிதஸ்தலங்கள் போன்றவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களுடன் இக்கலைக்களஞ்சியம் தயாரிக்கப்பட்டுவருகின்றது.  மேலதிகமான இவை பற்றிய அதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக செயலமர்வுகளும், பொதுமன்றங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.மேலும் கடந்த கால்நூற்றாண்டுக்கு உட்பட்ட தரவுவங்கியையும்,பதிவுகளையும் ஹஜ் ஆய்வு நிறுவனம் கொண்டுள்ளது." என ஹஜ் ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவரான நஸீர் பக்மி தெரிவித்தார்.




இக்களைக்களஞ்சியம் 3கட்டங்களாக உருவாக்கப்பட்டுவருகின்றது. முதல்கட்டமாக ஹஜ் மற்றும் வேறுபட்ட வரலாற்று காலப்பகுதிகள் பற்றிய அடிப்படைத்தகவல்களையும், மூலகங்களையும் ஒன்றுதிரட்டி எழுத்துருப்படுத்தல், ஹஜ்ஜில் அரசாங்கம்சாhந்த மற்றும் அரசாங்கம்சாராத தொகுதிகளின் செயற்பாடுகளை எழுத்துருப்படுத்தல்,இஸ்லாமிய உலகின் யாத்திரீகர்கள் பற்றிய தகவல்களை ஒன்றுபடுத்தல். போன்ற வேலைகள் நடைபெற்றுவருகின்றது. இரண்டாவது கட்டமாக,உலகில் காணப்படும் இஸ்லாமிய நாடுகளின் இலக்கியங்கள்,பாரம்பரியங்கள்,பல்வேறுபட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் ஆய்வுகள் எழுத்துருப்படுத்தப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments