ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகளை, வாபஸ்பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக்ஒபாமா,நேற்று புதன்கிழமை வெள்ளைமாளிகையில் நடைபெற்ற தெலைக்காட்சி உரையொன்றின் போது தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்துமாறு,ஒபாமவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துவருகின்றன.அமெரிக்க படையினரை திரும்பப்பெறும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.
இவ்வருட இறுதியில் 10,000 இராணுவவீரர்கள் திருப்பியழைக்கப்படும் எனவும்,2012 ஆண்டு முதலாம் காலாண்டுவரை இவ்இராணுவவீரர்கள்
திருப்பி அழைக்கப்படும். என அவர் மேலும் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் ஏறத்தாள ஒரு இலட்சம் இராணுவவீரர்கள் நிலைகொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் மீது அமெரிக்கா போர்த் தொடுதத்திலிருந்து தற்போதுவரை ஏறத்தாள 1500அமெரிக்கபடைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னால் அல் குவைதாவின் தலைவர் உஸாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் அமெரிக்க படையின் மீது,அல்குவiதா மேற்கொள்ளும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் வாபஸ் பெறப்படும் என்பதை ஆப்கானின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அறித்திருந்தனர்.சென்ற தசாப்பதத்தில் அமெரிக்கா, ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர்களை இராணுவத்துக்காக செலவு செய்தது.என ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.அண்மைக் காலங்களில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு,அதிக இராணுவச்செலவுகளே முக்கியகாரணம் என கூறப்படுகின்றது.மேலும் இப்;பொருளாதார நெருக்கடியின் மூலம்,அமெரிக்காவில் வேலையற்;றோரின் எண்ணிக்கை 9.1வீதம்வரை அதிகரித்துள்ளது.
0 Comments