புனித அல்குர்ஆனைஓதும் பேனா !






புனித அல்குர்ஆனது தற்காலத்தில் இறுவட்டுக்கள், கையடக்கத்தெலைபேசிகள் போன்ற பல்வேறுபட்ட நவீன சாதஙகளில் உள்ளடக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகின்றது. இவ்வகையில் புதிதாக அல்குர்ஆனை ஓதக்க்கக்கூடிய ஒருபேனா உருவாக்கப்பட்டுள்ளது. 




அல்குர்ஆனில் உள்ள எந்தவொரு வசனத்தையும்,இப் பேனாவிக்கு மிகதத்தெளிவாகவும்,சத்தமாகவும் ஓத முடியும்.எமக்கு ஓத வேண்டிய 
அல்குர்ஆன் வசனத்தின் மீது இப்பேனாவை வைப்பதன் மூலம்,இப் பேனா குறித்த அல்குர்ஆன் வசனத்தை ஓதும். அல்குர்ஆனை(கிராத்) ஓதுவதில் உலகளவில் பிரசித்திபெற்ற காரிகளான அப்துல் ரஹ்மான் சுதைசி, அப்துல் பாஸித்,அபூ எஸ்ஸமாத் ,அலி அல் ஹூதைபி மற்றும் ஸாத் அல் காமிதி போன்றவர்களில் விரும்பியவர்களின் குரலை எமக்கு தெரிவுசெய்யக்கூடிய வசதியும் இப்பேனாவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, இப்பேனாவில் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு வசதிகளும் காணப்படுகின்றன. இப்பேனாவில் குறித்த ஒரு பொத்தானை அழுத்துவதன்மூலம் ஆங்கிலம், உருது, பாரசீகம்,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற மொழிகளில், அல்குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களை செவிமடுக்க முடியும்.




இப்பேனாவானது சீனாவின் தயாரிப்பாகும். அரபுமொழியை வாசிப்பதில் சிரமப்படுபவர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது. இப்பேனாவுடன் தஜ்வீத் புத்தகமொன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது, இதன் மூலம்,குர்ஆன் ஓதுபவர்களுக்கு அரபுமொழியை சரியாக உச்சரிக்க உதவும் எனவும் எதிர்பாக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments