ஐக்கியநாடுகள்சபையின் யுனேஸ்கோ அமைப்பு,துருக்கி நாட்டின் செலிமிய்யி பள்ளிவாசலை உலகமரபுரிமை பட்டியலில் சேர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இவ்வாரம்வரை நடந்த பல உரையாடல்களின் பின்னர் இந்தத்தீர்மானம் எட்டப்பட்டது. உஸ்மானியக் கிலாபத்தின் ஆட்சியாளராகக் கடமையாற்றிய 'சிலின்' என்பவரின் காலத்தில்,அதாவது 1568-1570 காலப்பகுதியில் செலிமிய்யி பள்ளிவாசல் கட்டப்பட்டது. 4மினாராக்களை கொண்ட இப்பள்ளிவாசலில் சந்தை,நூலகம்,மத்ரஸா என்பன காணப்படுகின்றன. யுனெஸ்கோ அமைப்பானது,இதுவரை முழு உலகிலும் உள்ள 704 கலாசாரப்பகுதிகளை உலகமரபுரிமை நிரந்தரப்ப்டியலில் சேர்த்துள்ளது.கடந்த ஜூன் மாதம் 19ம்திகதி ஆரம்பிக்கப்பட்ட யுனெஸ்கோ அமைப்பின் கலந்துரையாடல்கள் சென்றவாரம் இறுதிவரை நடைபெற்றது.இக் கூட்டத்தில் துருக்கியின் 27 கலாசாரப்பிரதேசங்கள் உலகமரபுரிமை சொத்துக்காக முன்மொழியப்பட்டிருந்தன, இவற்றில் செலிமிய்யி பள்ளிவாசலே உலக மரபுரிமை சொத்தாக தெரிவுசெய்யப்பட்டது.துருக்கியின் 9 இடங்கள் தற்சமயம் உலகமரபுரிமை பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமையன்று யுனேஸ்கோவின் உலக மரபுரிமைக்குழு, 9இடங்களை உலகமரபுரிமை சொத்துக்களாக பிரகணப்படுத்தியது.செலிமிய்யி பள்ளிவாசல் உட்பட ஆபிரிக்கா,ஐரோப்பா மற்றும் ஆசியப் பிரதேசங்களிலுள்ள இடங்கள் இதில் உள்ளடங்கியுள்ளது.ஆசியாவில் நான்கு இடங்களுக்கு உலகமரபுரிமை அங்கீகாரம் கிடைத்தது. வட சிரியாவில் உள்ள பழைய கிராமம், ஜக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அல் ஐன் கலாச்சரப்பகுதி, ஈரானில் உள்ள பாரசீகத் தோட்டம்,வியட்னாமின்
ஹூடைனஸ்டி கோட்டை, என்பன ஆசியாவிலும், ஸ்பெய்னின் சேரா டி தெர்முனா நிலப்பகுதி,அலப்ஸ் மலைப்பகுதியை சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பிரதேசம், துருக்கியின் செலிமிய்யிபள்ளிவாசல் என்பன ஐரோப்பாவிலும், எதியோப்பியாவின் கோன்ஸோ கலாச்சாரக் கோட்டை,கென்யாவின் இயேசுக் கோட்டை போன்றன ஆபிரிக்காவிலும்,யுனெஸ்கோ அமைப்பினால்,உலகமரபுரிமைச் சொத்துக்களாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments