புனித மதீனா நகரில் 'ஸம் ஸம்' நீர்விநியோக நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை.


                                                     

புனித மதீனா நகரின் மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசலுக்கு அருகாமையில் 'ஸம் ஸம்' நீர்விநியோக நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவூதிஅரேபியாவின் நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் ஹூஸைன் தெரிவித்துள்ளர்.இத்திட்டத்தை தொடங்குவதற்கான
முதற்கட்ட நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்திக்கு 700மில்லியன் சவூதிரியால்கள் செலவாகும்.  என எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.புனித மதீனாநகரில் ஒவ்வொரு நாளும் நீர் வழங்குவதற்காக,42 நீர்விநியோக கிளைகள் அமைக்கப்படவுள்ளன.ஹஜ் மற்றும் உம்ராவுக்கு வரும் யாத்திரீகர்களின் நன்மைகருதியே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.






இந்நீர் விநியோக நிலையங்களுக்கு நீர்நிரப்பும் போத்தல்கள் வழங்கப்படவுள்ளன. இவற்றின் மூலம்ஹஜ் மற்றும் உம்ராவுக்கு வரும் யாத்திரீகர்களுக்கு ஸம் ஸம் நீரை தம்நாடுகளுக்கு கொண்டுசெல்லக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.மேலும் ஸம் ஸம் நீர்விநியோக நிலையங்கள் வராத்தின் ஏழுநாட்களிலும், 24 மணித்தியாலமும் யாத்திரீகர்களுக்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments