இலங்கையில் இனவாதிகளால் பள்ளிவாசல் உடைப்பு!








இலங்கையின் மத்திய மாகணத்தின் தம்புள்ள நகரில் அமைந்திருக்கும்
தம்புள்ள ஜூம்ஆப் பள்ளிவாசல் பௌத்த இனவாதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஜூம்ஆத்தொழுகைக்குக்காக  கூடியிருந்த மக்களைபள்ளிவாசலில் இருந்து வெளியேற்றிவிட்டு பௌத்தபிக்குகள் உட்பட பௌத்த இனவாதிகளால் தம்புள்ளை ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளதாக
செய்திகள் தெரிவிக்கின்றன.1965ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளிவாசலானது 50வருடங்கள் பழமைவாய்ந்ததாகும். வெள்ளிக்கிழமை காலை தம்புள்ள நகரில், பள்ளிவாசல் உடைக்கப்படவேண்டும் எனக்கோரி பௌத்தபிக்குகள் உட்பட 
இரண்டாயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன்,பின்னர் குறித்த பள்ளிவாசலை அக்குழுவினர் முற்றுகையிட்டுள்ளனர்.பாதுகாப்புக் கடமையில் பொலீஸார் உட்பட இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த போதிலும்,அவர்களின் முன்னிலையே இனவாதிகளினால் பள்ளிவாசலானது உடைக்ப்பட்டுள்ளது. ஜூம்ஆதொழுகைக்காக பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஒன்றுகூடியிருந்தபோது 
பௌத்தபிக்குகள் உட்பட இனவாதிகளால் பள்ளிவாசல் முற்றுகையிடப்பட்டதாகவும்,பின்னர் முஸ்லிம்களை பள்ளிவாசலில் இருந்து வெளியேறுமாறு கோரியதாகவும் பள்ளிவாசலில் இருந்து மக்கள் வெளியேறிய பின்னர் பள்ளிவாசலில் நுழைந்த பௌத்த இனவாதிகளால் பள்ளிவாசல் தாக்கப்பட்டதாகவும் தம்புள்ள பள்ளிவாசலின் நிருவாக சபைத்தலைவர் பீபீசிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.பௌத்த புனித பூமியில் பள்ளிவாசல்
அமைந்திருந்தனாலேயே பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக பௌத்த
பிக்குகள் தெரிவிக்கின்றனர்.எனினும் தம்புள்ள ஜூம்ஆப் பள்ளிவாசலானது முஸலிம்களின் சொந்தக் காணியிலேய கட்டப்பட்டுள்ளதுடன்,50வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் இப்பள்ளிவாசலை தொழுகைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்க விடயமாகும்.




இலங்கையில் அண்மைக்கலமாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத
செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.கடந்த சிலகாலங்களுக்கு முன்னர் இலங்கையின் அநுராதபுர நகரில் பழமைவாயந்த மக்பராவொன்று இனவாதிகளால் உடைக்ப்படடது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அதிகமானபுத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் அதிகமான இனவாத இணையதளங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக Facebook இணையதளத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாத 
Pages,Groups என்பன செயற்பட்டுவருகின்றன. 









Post a Comment

0 Comments