யெமனியமக்கள்,அந்நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் நாட்டைவிட்டு வெளியேறியதைகொண்டாடுகின்றனர். யெமனிய ஜனாதிபதி தமது மருத்துவ சிகிச்சைக்குப்பிறகு நாடு திரும்புவார்,என யெமனின் அரச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.எனினும் அரசியல் ஆய்வாளர்கள் ஜனாதிபதி ஸாலிஹ் நாடு திரும்பமாட்டார்.என நம்புகின்றனர்.எகிப்தின் ஹூஸ்னி முபாரக்,டியூனிசியாவின் ஸைன் பின் அலி போன்றவர்களுக்குப் பிறகு,மத்திய கிழக்கு புரட்சியால் பாதிக்கப்பட்டவர்,என யெமன் ஜனாதிபதி
அலி அப்துல்லாஹ் ஸாலிஹை இவ் அரசியல் ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.
சவூதி அரசாங்கமும், ஒபாமாவின் நிர்வாகமும் யெமன் ஜனாதிபதி ஸாலிகைப் பாதுகாப்பதற்கு கடந்த நான்கு மாதங்களாகளுக்குமேலாக அவர்களால் முடியுமான உதவிகளை செய்துவந்தனர்.யெமனின்
வடக்கிலும்,தெற்கிலும் ஸாலிஹிக்கு மக்கள் எதிராகவே நின்றனர்.இது அவருக்கும்,அவரது ஆதரவாலர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்தது.
அமெரிக்காவின் ஆலோசனைப்படி,ஸாலிஹின் படையினரும்,சவூதிய இராணுவமும் பல போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டனர்,மேலும் ஸாலிஹின் படையினர் ஆயிரக்கணக்காண அப்பாவி யெமனிய மக்களைக் கொலைசெய்தனர்.
யெமனில் நடக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள்
சவூதியை பாதிக்கும். என சவூதியின் ஆட்சியாளர்கள்
நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.ஏனெனில் புவியியல் ரீதியில் சவூதிக்கு அருகே யெமன் அமைந்துள்ளது. மேலும் இரு நாடுகளிக்கிடையில் சமூக,கலாச்சார உறவுகள் காணப்படுகின்றன.
பாரசீக வளைகுடா கூட்டுறவு அமைப்பின்
((P)GCC)மூலம்,யெமனின் ஆட்சியைமாற்றுதல் தொடர்பான ஓர் திட்டத்தை சவூதி அரேபியா கொண்டுவந்துள்ளது.இவ் அமைப்பு யெமனில் அமைதியான சூழலை ஏற்படுத்தி,புதிய அரசியல் சீர்திருத்தைக் கொண்டுவரும் என அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.இன்னும் முப்பது நாடகளில் ஸாலிஹை பதவிதுறக்கச் செய்து,ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து,ஐக்கிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க பேச்சுவாத்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
யெமனின் சர்வதிகார ஆட்சியின் வீழச்சியானது,முஸ்லிம் நாடுகள் மீது மேற்கத்திய தலையீட்டுக்குஎதிராக,இன்னுமொரு இஸ்லாமிய எழுச்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.இது சவூதி அரசை ஆட்டம்காணவைத்துள்ளது.என செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments