அமெரிக்காவானது உலகநாடுகளில் இராணுவத்திக்கு அதிகசெலவு செய்யும் நாடாக காணப்படுவதாக,அண்மையில் ஓர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள்தெரிவிக்கின்றன.இதனால்அந்நாட்டில் நிதி நெருக்கடி ஏற்படடடுள்ளதுடன்,இவ் அதிக இராணுவச்செலவினால் வரவுசெலவுதத் திட்டத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,அமெரிக்காவின் இராணுவச்செலவுகள் 2001ம் ஆண்டு முதல் 81வீதத்தால் அதிகரித்துள்ளதாக,இவ்வாய்வை மேற்கொண்ட ஸ்டக்கோம் சர்வதேச சமாதான ஆய்வுநிலையம் (SIPRI) தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவானது,சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 2வீதத்தால் அதிகரித்துள்ளதாக மற்றுமோர் செய்தி தெரிவிக்கின்றது.
கடந்தவருடம் அமெரிக்காவின் இராணுவச்செலவானது 2.8வீதத்தினால்அதிகரித்துள்ளது.இம்முழுத் தொகையானது 698பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.இத்தொகையானது உலகின் இரண்டாவது அதிகஇராணுச்செலவு செய்யும் நாடான சீனாவின்,இராணுவச் செலவின் ஆறு மடங்காகும்.சீனாவுக்கு அடுத்தபடியாக முறையே பிரிட்டன்,பிரான்ஸ்,ரஷ்யா போன்ற நாடுகள் காணப்படுகின்றன.
அமெரிக்கா அண்மைக்காலமாக லிபியாவில் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளினால், அந்நாட்டின் பொருளாதாரமானது மிகமோசமாகக் காணப்படுவதாக,அண்மையில் அமெரிக்க சட்டசபையின் கீழ்நிலை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதுடன்,இப்போரில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்ளவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
0 Comments