யெமனின் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தனது காயங்களிற்கு மருத்துவச்சிகிச்சை செய்வதற்காக நாட்டைவிட்டு சவூதி அரேபியாவிற்கு சென்றதை யெமனிய இளைஞர்கள் கொண்டாடினர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதி வசிப்பிடப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலில் காயமடைந்த ஜனாதிபதி சிகிச்சை பெறும்முகமாக யெமனின் உயர்அதிகாரிகள், பாரளுமன்ற இருதரப்புப் பேச்சாளர்கள்,பிரதிப்பிரதமர் அடங்கிய குழுவொன்றுடன் சனிக்கிழமையிரவு
சவூதி அரேபியாவிற்குப் பயணமானார்.
வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் யெமனிய ஜனாதிபதியின் கழுத்துப்பகுதியும்,நெஞ்சுப்பகுதியும் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகியாதாக செய்திகள் தெரிவித்திருந்தன.
ஜனாதிபதியாகவும்,ஆயுதப்படை மேல் தளபதியாகவும் உப ஜனாதிபதி அப்த் ரபூ மன்சூர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1978முதல் ஜனாதிபதியாகப்பதவி வகிக்கும் ஸாலிஹிற்கு,வேலையில்லாப்பிரச்சினை மற்றும் ஊழல் போன்றவற்றை முடிவுக்கு கொண்டவருமாறு கோரி,2011 ஜனவரி கடைசி தொடக்கம் பல்லாயிரக்கணக்கானமக்கள் யெமனின் பெரிய நகரங்களில் ஆhப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
0 Comments