வடகிழக்கு ரமல்லா பிரதேசத்தில் முக்கைர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு மஸ்ஜிதுக்கு, இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் நேற்று செவ்வாய்க்கிழமையன்று தீவைதத்துள்ளனர். மதங்களிற்கு இடையில்
ஒற்றுமையைக் குலைக்கும்; இச் ஸியோனிஸ இனவெறியர்களை ஹமாஸ் வன்மையாகச் சாடியுள்ளது.
மஸ்ஜிதுகளுக்கு தீவைப்பதும்,அதன் சுவர்கள் மீது இனவெறிக் கருத்துக்களை எழுதுவதும் சர்வதேச மரபுகளை,மனித விழுமியங்களை மீறும் செயலாகும்.
'இக்கீழ்தரமான செயல்களை செய்வதற்கு,இஸ்ரேலிய இராணுவம் உதவியாக இருந்தார்கள்.' என ஹமாஸ் ஊடகமொன்றுக்கு செய்தி வெளியிட்டுள்ளது.
'இந்நடவடிக்கையை பலஸ்தீனில் உள்ள மனித உரிமை அமைப்புக்களிற்கு தடுக்க முடியவில்லை. கடைசியாக இவ் அமைப்புக்கள் பலஸ்தீன மக்களையும்,அவர்களின் புனிதஸ்தலங்களையும்
பர்தகாப்பது போல் பாசாங்கு செய்தனர்.' எனறு மேலும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது.
0 Comments