துபாயில் ரமழான்மாதத்தில் விளக்கவுரை மகாநாடுகளை நடாத்த 10நாடுகளிலிருந்து 35முஸ்லிம் அறிஞர்கள் அழைக்கப்படவுள்ளனர்.




துபாயில் ரமழான் மாதத்தில் விரிவுரைகளை நடாத்துவதற்காக, அரேபிய மற்றும் ஆசியநாடுகளில் இருந்து35முஸ்லிம் அறிஞர்கள் அழைக்கப்படவுள்ளனர்.சவூதிஅரேபியா,பஹ்ரைன்,மோரோக்கோ,
யெமன்,எகிப்து,சிரியா,முர்தானியா,பாகிஸ்தான்,மலேசி யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து பிரபல முஸ்லிம் அறிஞர்கள் இவ்விளக்கவுரை மகாநாடுகளை நடாத்துவதற்காக அழைக்கப்படவுள்ளனர்.  உள்நாட்டு சமூகமக்களுடன் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டிய ஆலோசனைகளை வழங்கள், நிபுணத்துவத்தைப் பரிமாற்றிக் கொள்ளல்,சிறந்த நவீன அணுகுமுறைகளினால் இஸ்லாத்தைப்பற்றி மக்களுக்கு எடுத்துச்செல்லக்கூடியமுறைகளை ப்பற்றிக் கலந்துரையாடல்.போன்ற விடயங்களைஇவ்அறிஞர்கள்,ஐக்கிய அரபு இராச்சியஅறிஞர்களுடன் ஆராயவுள்ளதாக தொவிக்கப்பட்டுள்ளது.




வெளிநாட்டு முஸ்லிம் அறிஞர்களின் நிகழ்ச்சிகள்,பிரதிப்பிரதமர் மற்றும் ஜனாதிபதி விவகார அமைச்சருமானஷெய்க் பின்ஸைத் அல் நைஹான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெறவுள்ளது. ரமழான்மாதத்தில் நடைபெறவுள்ள,  வெளிநாட்டு முஸ்லிம் அறிஞர்களின் நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் அண்மையில் வெளியிடப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரமழானில், வெளிநாட்டு முஸ்லிம் அறிஞர்களினால் நடாத்தப்படவுள்ள விளக்கவுரைமகாநாடுகள் மூலம்,குறிப்பாக இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டல்கள் கிடைக்கப்பெறும்.என நம்பப்படுகின்றது.




Post a Comment

0 Comments