புனித ரமழானுக்கு முன்னால் கட்டாரில் 25பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.







புனித ரமழான் மாதத்திக்கு முன்னால் கட்டாரில் 25 பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.திறக்கப்படவுள்ளஇப்பள்ளிவாசல்கள்மூண்றுமாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.இப்பள்ளிவாசல்கள் கட்டாரின் பள்ளிவாசல் திணைக்களத்தால் கட்டப்பட்டது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இப்பள்ளிவாசல்கள் சர்வதேசதரத்திக்கு அமைவாகக் கட்டப்பட்டுள்ளதுடன், சுற்றுச்சூழலிக்கு பாதிப்புக்கள் ஏற்படதவாறு சூரியஒளியைப்பயன்படுத்தியே மின்சாரம் பெறப்படுகின்றது.இதன் மூலமே பள்ளிவாசல் சூழலிலுள்ள தோட்டத்திக்கு நீர்வழங்கப்படுகின்றது.இதற்கான தொழிநுட்பத்தை கட்டார் பசுமைக் கட்டிட நிலையம் வழங்கியுள்ளது.என கட்டார் பள்ளிவாசல் திணைக்களத்தின் ,கட்டுமானத்திக்கான தலைவர் ஸலாஹ் அல்பக்ரி தெரிவித்தார்.மேலும் 94 பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்கு 42.5மில்லியன் கட்டார் ரியால்கள் செலவாகும். என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திக்கான நிதியில் ஒருபகுதி நன்கொடையாகக் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மீதித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாக,ஸலாஹ் அல்பக்ரி மேலும் தெரிவித்தார்.




இடவசதியின்றி பள்ளிவாசலுக்குவெளியே தொழுவதைக் குறைக்கும் நோக்கிலேயே புதிதாகத் திறக்கப்படவுள்ள பள்ளிவால்களில் மூண்றுமாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாகவெயில் காலங்களில் மக்கள் வெளியில் தொழுவதைக்குறைக்கும் நோக்கிலேயே இது அமைக்கப்பட்டுள்ளது. கட்டாரின் தலைநகர் டோஹாவில் 652பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன.அவற்றில் 259 பள்ளிவாசல்கள்பெண்களுக்கு தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளுக்காக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. 










Post a Comment

2 Comments

  1. மிகவும் சந்தோசமான செய்தி நண்பரே இதனை இத்தளத்திலும் தாங்கள் வருகை தந்து பதிவிடுங்கள் உங்களின் வருகையினை எதிர்பார்க்கிறோம் புதிய தகவல்கள் மற்றும் கருத்துக்களை
    http://chenaitamilulaa.bigforumpro.com/t15274-topic#134027

    ReplyDelete
  2. நமது ஊர்களில் பெண்கலுக்கு பள்ளியில் தொழுவதர்க்கு வசதில்லாத பள்ளிகல் தான் அதிகம் இனிமேலாவது நமது ஊர்களிலும் பள்ளி கட்டும்போது பெண்கலுக்கு உரிய வசதியோடு பள்ளி கட்ட வேண்டும் என்ற ஆசைதான் தோண்ருகிறது நிறைவேருமா?

    ReplyDelete