ஈராக்கின் வன்முறைகளால் இரு வருடங்களில் 900சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளர்.

             


ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளால் கடந்த இருவருடங்களில் குறைந்தது 900 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசேப் அமைப்பு தெரிவித்துள்ளது.2008-2010 இடைப்பட்டகாலப்பகுதியிலே இச்சிறுவர்கள் வன்முறைச் சம்பவங்களினால் கொல்லப்பட்டதாகவும்,மேலும் 3200பேருக்குஅதிகமான சிறுவர்கள் இதனால் காயமடைந்துள்ளதாகவும், யுனிசேப் அமைப்பு கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. வன்முறைச் சம்பவங்களினால் 2008ம் ஆண்டு 376சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன், 1594சிறுவர்கள் காயமடைந்தனர்.அதற்கு முந்திய ஆண்டு 362சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன்,1044சிறுவர்கள்காயமடைந்ததாக ஈராக்கின் சிறுவர்களுக்கான ஓர் அமைப்பு செய்திவெளியிட்டுள்ளது.2010ம் ஆண்டின்முதல் ஒன்பது மாதகாலப்பகுதியில் வன்முறைகளினால் 134சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன், 590சிறுவர்கள்காயமடைந்தனர்.என செய்திகள் தெரிவிக்கின்றன.




கடந்த இருவருட காலப்பகுதியில் 8.1வீதமான சிறுவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளானதாக யுனிசேப்அமைப்பு தெரிவித்துள்ளது.ஈராக்கில் சிறுவர் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகஈஅவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.2005ம் ஆண்டு ஜூலைமாதம் 13ம்திகதி ஈராக்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தினால் 32சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கின் சிறுவர்களை விளையாட்டுப்பொருட்களாகவே கருதவதாக யுனிசேப் அமைப்பு தெரிவித்துள்ளது.பாடசாலைகளையும்,சிறந்த கல்வி நிலையங்களையும், ஆசிரியர்களையும் மற்றும் உயர்அதிகாரிகளையும் இலக்குவைத்து தாக்குதல்கள் நடாத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்தமே,ஜூன் காலப்பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்கள் மூலம் பாடசாலைகள், ஆசிரியர்கள் மற்றும் கல்விஅதிகாரிகள் பாதிக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments