2005ம் ஆண்டு லெபனானின் முன்னால் ஜனாதிபதி ரபீக் ஹரீரி படுகொலைசெய்யப்பட்டார், அவரின்கொலை தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் நீதிமன்றமொன்று லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களுடன் இச்சம்பவத்தை தொடர்புபடுத்துவதாக,லெபனானின்தொலைக்காட்சி சேவை நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவின் கீழ் இயங்கும்,ஆட்சேபனைக்கு இடமளிக்கும் லெபனானுக்கான விஷேட நீதிமன்றம்,ரபீக் ஹரீரியின் கொலை தொடர்பான விசாரணைகளை கடந்த நான்கு வருடங்களாக மேற்கொண்டுவருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்நீதிமன்றம் விசாரணையின் முடிவையும்,கைதுசெய்யும் ஆணையையும் லெபனானின் நீதி அமைச்சுக்கு ஒப்படைத்துள்ளது.மேற்கு உலகச் சார்புக் கட்சியான அல் முஸ்தக்பால் கட்சியின் தலைவரும்,ரபீக் ஹரீரியின் மகனுமான சாத் ஹரீரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் நான்கு உறுப்பினர்கள் குற்றவாளிகளாக இணங்காணப்பட்டுள்ளதாக அல் முஸ்தக்பால் கட்சிக்கு சார்பான மேற்கத்தைய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இதனை ஹிஸ்புல்லா அமைப்பு வன்மையாக மறுத்துள்ளதுடன்,'இது அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் திட்டமாகும்' எனவும் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரபீக் ஹரீரி உட்பட மேலும் 20பேர், 2005ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி லெபனானின்தலைநகர் பெய்ரூத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில் பலியாகினர். இத்தாக்குதலில் சிரியாவும்,ஹிஸ்புல்லா அமைப்பும் தொடர்புபட்டுள்ளதாக ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. முன்னால் பிரதமர் ரபீக் ஹரீரியின் படுகொலையின்பின்னணியில் இஸ்ரேல் செயற்பட்டதாக,ஹிஸ்புல்லாவின் செயலாளர் ஜெனரல் சையித் ஹஸன் நஸருல்லா 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும்போது தெரிவித்தார். மேலும் இஸ்ரேலின் உளவுஅமைப்பான 'மோஷாட்' இக்கொலைக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments