சுப்பர்சோனிக் ஏவுகணைகளை ஈரான் பரிசோதனை செய்ய திட்டம்.

                       


புவியில் இருந்து கடலுக்கு சென்று தாக்கும் 'சுப்பர்சோனிக்' ஏவுகணைகளை ஈரான் பரீட்சிக்கவுள்ளது.பாரசீகவளைகுடாவில் நடைபெறவுள்ள போர்விளையாட்டுப் பயிற்சியில்,இவ்ஏவுகணைகள் பரீட்சிக்கப்படவுள்ளதாக ஈரானின் சிரேஷ்ட இராணுவக்கட்டளைத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.பரீட்சிக்கப்படவுள்ள இவ் ஏவுகணைகள்,கடலில் உள்ள கப்பல்களையும், இராணுவப்படைகளையும் இலக்கு வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளதாக,பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலிஹாஜிஸ்டீன் தெரிவித்தார்.ஒலியின் வேகத்தின் பல மடங்கு வேகத்தில் சென்று எதிரிக்கப்பல்களைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளை தயாரிப்பதற்கான தொழிநுட்பத்தை கடந்தவருடம் பெற்றுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.




ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்துறை(IRGC),ஏற்கனவே பெரிய இறைத்தூதர் பயிற்சி6 என்ற பெயரில் 10நாட்கள் போர்பயிற்சிகளை நடாத்தியது.இப் பயிற்சியின் போது ஏறத்தாள 110நடுத்தரவகைஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டன.இவ் ஏவுகணைகள் பலகிலோமீற்றா வரை சென்று இலக்கைத் தாக்கக்கூடியவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன்போது ஈரானால் உருவாக்கப்பட்ட ராடர் ஒன்றும் பரீட்சிக்கப்பட்டது. இதற்கு 1100கிலோமீற்றர் ஆரையடைய, 300கிலோமீற்றர் உயரமுடைய பகுதியை கண்காணிக்க முடியும். 
  

Post a Comment

0 Comments