கிழக்கு காஸா பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல்.



                                     

இஸ்ரேலிய இராணுவத்தினர் காஸாநகரின் கிழக்குப்பகுதியில் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.நேற்று செவ்வாய்க்கிழமை இரவு,இஸ்ரேலிய ஜெட்விமாணங்கள் பலஸ்தீனின் காஸா பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.சில நாட்களுக்கு முன்னர்,இஸ்ரேலியஇராணுவம் கிழக்கு காஸாப்பகுதியின் அல் மகாஸி அகதிகள் முகாமின் மீது மேற்கொண்ட ஆட்லறி
செல்தாக்குதலினால் இரண்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன்,மேலும் பலர் காயமடைந்தனர்.ஏப்ரல் மாதம் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தொடர் செல்தாக்குதல்களினால் பலஸ்தீனின் வெவ்வெறு பிரதேசங்களில்,குறைந்தது 19பேர் கொல்லப்பட்டனர்.மேலும் மே மாதம் 15ம் திகதி நகபாதினத்தன்று,இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டினால் 24பேருக்கு அதிகமானோர்
கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.




பலஸ்தீனின் காஸாப்பகுதியின் சுரங்கவளையமைப்புக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் சாரமாரியாக குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது.பலஸ்தீனின் ஹமாஸ் இயக்கத்தின் போராளிகள்,சுரங்கங்களில் மறைத்துவைத்துள்ள ஆயுதங்களை அழிக்கும் நோக்கிலே,இஸ்ரேலிய இராணுவம்தாக்குதல்களை மேற்கொள்ளவதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் கடந்த மூண்று வருடங்களாக காஸாவிக்கான பாதைகள் மூடப்பட்டிருந்த போது,வாழ்கைக்கு அவசியமான அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்வதற்காகவே இச்சுரங்கள் பயன்படுத்தப்பட்டன. என்பது குறிப்பிடத்தக்கது.


1.5மில்லியன் பலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகள் (சுதந்திரம்,வேலைவாய்ப்பு, சுகாதாரம்,கல்வி போன்ற உரிமைகள்) மறுக்கப்பட்டு வருகின்றது. 1948ம் ஆண்டு இஸ்ரேலிய இராணுவம் ஏழுஇலட்சம் பலஸ்தீன மக்களை பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றினா.என்பது வரலாற்றில் பதிந்த உண்மையாகும்.

Post a Comment

0 Comments