குவைட்டில் தாஜ்மஹாலின் வடிவில் ஒரு பள்ளிவாசல் உருவாக்கப்பட்டுள்ளது.!




இந்தியாவின் வரலாற்றுச்சிறப்புமிக்க, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வடிவில்அமைந்த பள்ளிவாசலொன்று குவைட்டில் உருவாக்கபட்டுள்ளது.இந்தியாவானது பல்வேறுபட்ட கட்டிடக்கலை வடிவமைப்புக்களுடனான கட்டிடங்களைக் கொண்டுள்ளது. தாஜ்மஹால்,செங்கோட்டை என்பன இவற்றில்சிலவாகும்.குவைட்டில் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹாலின் வடிவத்தைஒத்த பள்ளிவாசலானது இவ்வருடம் திறக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.தாஜ்மஹாலின் வடிவில் கட்டப்பட்டுள்ள இம்மஸ்ஜிதுக்கு
அஸ்ஸதீகா பாதிமதுல் ஸஹ்ரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசாலானது குவைட்டில் உள்ள கட்டிடங்களுக்கு இடையில், தனித்துவமான ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.இப் பள்ளிவாசலின் உட்பகுதியானது தஜ்மஹாலை போன்றல்லாது, முற்றிலும் வேறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது.






தாஜ்மகாலானது,முகலாயப் பேரசின் ஆட்சியாளரான ஸாஜஹானால், அவரின் மனைவி மும்தாஜ்நினைவாக 1653ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. தாஜ்மஹாலானது 1983ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனோஸ்கோ அமைப்பினால்,உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடணப்படுத்தப்பட்டது.மேலும்இதன் சிறந்த கட்டிடக்கலை அம்சமானது, தற்போதைய கட்டிடக்கலைஞர்களால் அதிசயமாகவே நோக்கப்படுகின்றது.குவைட்டில் உருவாக்கப்பட்டுள்ள பள்ளிவாசலின் உட்பகுதியானது,அல் குர்ஆன் வசனங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளிவாசலானது 3,136சதுரமீற்றர் பரப்பளவில் 
கட்டப்பட்டுள்ளது.தாஜ்மஹால் வடிவில் குவைட்டில் உருவாக்கப்பட்டுள்ள பள்ளிவாசலானது,ஒரு புதுவிடயம் அல்ல.துபாய்,சீனா போன்ற நாடுகளில் ஏற்கனவே தாஜ்மஹால் வடிவில் பள்ளிவாசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அண்மையில் பங்களாதேஷின் டாக்கா நகருக்கு அருகில்,இது போன்ற ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது.

Post a Comment

0 Comments