இஸ்ரேலின் வன்முறைகளைச்சித்தரிக்கும் கேலிச்சித்திரத்திக்கு அமெரிக்க விருது.





பிரேஸிலின் சுதந்திரஊடகவியளாளரான கர்லோஸ் லதுப்ஸினால், இஸ்ரேலின் வன்முறைகளைச்சித்திரத்திக்கும்படியாக வரையப்பட்ட "ரபாவில் ஒருநாள்"என்ற பெயரில் வெளியான கேலிச்சித்திரமானது அமெரிக்காவின் சிறந்த அரசியல் கேலிச்சித்திரத்திக்கான விருதைப்பெற்றுள்ளது.இக் கேலிச்சித்திரத்தமானது,ஓர்
இஸ்ரேலியச் சிறுவன் இனவெறியைத் தூண்டும்விதமாக ஓர் பலஸ்தீனச்சிறுவனுடன் உரையாடும்நிகழ்வை குறிப்பிடுகின்றது.பார்ஸ் செய்திச்சேவையின் சுதந்திர ஊடகவியலாளர் கர்லோஸ் லதுப்ஸிக்கே அமெரிக்காவின் இவ்விருது கிடைத்துள்ளது.


இக்கேலிச்சித்திரத்தில் இஸ்ரேலியச்சிறுவன் ஒருவன் பலஸ்தீனச் சிறுவன் ஒருவனிடம் "அரேபியர் கொடியமிருகத்தனமான பயங்கரவாதிகள்,என எனது தந்தை எனக்கு கூறியுள்ளார்" எனக் கூறுகிறான்.இதற்குப் பலஸ்தீனச்சிறுவன் "எனது தந்தை என்னிடம் எதையும் கூறவில்லை! ஏனெனில் உங்களாலே எனது தந்தை கொலைசெய்யப்பட்டார்" எனப் பதிலளிக்கிறான்.

Post a Comment

0 Comments