இன்திபாழா தொடர்பான மகாநாடொன்றை ஈரான் நடாத்தவுள்ளது.



இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன மக்கள் நடாத்தும் இன்திபாழாவுக்கு(எழுச்சி) ஆதரவு தெரிவிக்கும்முகமாக ஈரான், இன்திபாழா தொடர்பான சர்வதேச மகாநாடோன்றை நடாத்தவுள்ளதாக ஈரானியஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இம்மகாநாடானது ஈரானின் தலைநகர் தெஹ்ரானில், ஒக்டோபர் மாதம்முதலாம்,இரண்டாம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளதுடன், இம்மகாநாட்டுக்குப் பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள் கலந்துகொள்ள அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.ஈரானின் பராளுமன்றம் மஜ்லிஸின் அனுசரனையில் இம்மகாநாடு நடாத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.




"பலஸ்தீனமக்களுக்கு முற்றாக உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான வழிகளைகளைக் காணல்"என்றதொனிப்பொருளின் கீழ் இம்மகாநாடு நடைபெறவுள்ளது. நைஜீரியாவின் தலைநகர் தம்புவாவில்,ஈரான் வெளிநாட்டு அமைச்சரின் தலைமயில் கடந்த புதன்கிழமை, எட்டு அபிவிருத்தியடைந்து வரும்நாடுகளின் அமைப்பின்(D8)   கூட்டத்தில் இம்மகாநாடு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான்,துருக்கி, எகிப்து, மலேசியா,பாகிஸ்தான், நைஜீரியா,பங்களாதேஷ்,இந்தோனேசியா போன்ற நாடுகள்   D8 அமைப்பில் அங்கத்துவம்வகிக்கும் நாடுகள் ஆகும்.

Post a Comment

0 Comments