அரசாங்கத்தின் தேசியமட்டப் பேச்சுவார்த்தைக்கும்,சீர்திருத்திக்கும் ஆதரவுதெரிவித்து ஆயிரக்கணக்கானசிரியமக்கள் ஒன்றுகூடல்.







அரசாங்கத்தின் தேசியமட்ட பேச்சுவார்த்தைக்கு மற்றும் சிரியாவின் ஜனாதிபதி பஸர் அல் அஸாதின்தலைமையில் கொண்டுவரப்படவுள்ள சீர்திருத்தத்திக்கு ஆதரவு தெரிவித்தும்,சிரியாவின் உள்நாட்டு விடயங்களில் வெளிநாட்டுத் தலையீடை எதிர்த்தும்,ஆயிரக்கணக்கான சிரியாமக்கள் தேசியக்கொடிகளையையும்,பதாகைகளையும் ஏந்தியவன்னம் டமஸ்கஸ்நகரின் ஹிஜாஸ் சதுக்கத்தில் நேற்று மாலை வெள்ளிக்கிழமை ஒன்றுகூடினர்.இவர்கள்,ஆயுதம்தரித்த பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக சிரியாவின் இராணுவம்,பாதுகாப்புப்படைகள் மேற்கொள்ளும் யுத்தத்திக்கு ஆதரவு தெரிவித்து குரல்கொடுத்தனர். ஆயுதக்குழுக்கள் தமது சொந்தநோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர். ஆயுதாரிகள் அரசசொத்துக்களுக்கு நாசம்விளைவிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.




சிரியாவில் பாரியளவில் உள்நாட்டுமோதல்கள் நடப்பதாக,ஊடகங்கள் கூறும் செய்திகளை நிராகரிக்கும்வகையிலே தாம் ஒன்றுகூடியதாக அவர்கள் தெரிவித்தனர்.இவ் அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சியாவின் தேசியக்கொடியை கையிலேந்தியவன்னம் தேசிய ஒற்றமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.மேலும் அவர்கள் சிரியாவின் இராணுவத்திக்கு கௌரவமளித்ததுடன், சிரியாவுக்கு எதிராக செய்மதிசெய்திச்சேவை நிறுவனங்கள் தெரிவிக்கும் செய்திகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments