பஹ்ரைனில் மருத்துவர்கள் கைதுசெய்வதை நிறுத்துமாறு மனிதஉரிமை அமைப்புக்கள் தெரிவிப்பு.

             

மருத்துவர்களை மற்றும் அரசாங்கத்திக்கு எதிரான புரட்சியில் காயமடைந்தவர்களையும்,பஹ்ரைன்அரசாங்கம் கைதுசெய்வதை மனித உரிமைகள் கண்கானிப்பு மையம்(HRW)  கண்டித்துள்ளது.இந் நடவடிக்கையானது அத்துமீறல் செயல் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. பஹ்ரைன் அரசாங்கமானது,மருத்துவர்களை மற்றும் அரசாங்கத்திக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை காரணமின்றி 
கைதுசெய்கின்றனர்.அரசாங்கத்திக்கு எதிராகச் செயற்படுவர்களை கைதுசெய்வது, அரசாங்கத்தின் ஓர்கொள்கையாகும்.என பஹ்ரைன் அரசாங்கம் கூறுகின்றது.எனினும் இதற்கான் சான்றுகளை அரசாங்கம்குறிப்பிடவில்லை.என திங்கட்கிழமை தமது அறிக்கையொன்றை வெளியிடும் போது மனித உரிமைகண்கானிப்பு மையம் தெரிவித்துள்ளது. "பஹ்ரைனில் மருத்துவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்,காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,சுகாதாரசேவைகள் என்பவற்றை இலக்குவைத்தால் ஏற்பட்ட பிரதிபலன்கள்"என்றபெயரில் 54பக்கங்களைக் கொண்ட அறிக்கையை மனித உரிமைகள்கண்கானிப்பு மையமானது கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது.




2011ம் ஆண்டு பெப்ரவரிமாதம் நடுப்பகுதிமுதல்,பஹ்ரைனில் அரசாங்கத்திக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடயத்தில் பஹ்ரைன் அரசாங்கமானது தவறாக நடந்துகொண்டதாக அவ்வறிக்கை கூறுகின்றது.சுகாதார சேவைகள் வழங்கும் நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது,காயமடைந்தஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டது,வைத்தியசாலைகள் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது. உள்ளிட்ட பல்வேறுவிடயங்களில் பஹ்ரைன் அரசாங்கம் தவறாக நடந்துகொண்டதாக, அவ்வறிக்கையில்மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது. பஹரைனிய அரசினால்,மார்ச் மாதம் முதல் இதுவரை 70க்கு அதிகமான மருத்துவர்கள் கைதுசெய்துள்ளதுடன்,மேலும்150க்கு அதிகமானமருத்துவ உதவியாளர்கள் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது தொழிலையும் இழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments