துபாயில் வெள்ளை-நீல நிறங்களில் அமைந்த பள்ளிவாசல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 4,200 சதுரமீற்றாகள் பரப்பளவைக்கொண்டதாக இப்பள்ளிவாசலானதுஅமைக்கப்பட்டுள்ளது.மேலும்இப்பள்ளிவாசலானது ரமழான் மாதத்திக்கு முன் திறக்கபடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. துருக்கியின் பிரசித்திபெற்ற நீல மஸ்ஜிதிக்குப்பின்,துபாயில் உருவாக்கப்பட்டுள்ள இப்பள்ளிவாசலானதுபல்வேறான கட்டிடக்கலை அம்சங்கள் அடங்கிய அழகான பள்ளிவாசலாகக் காணப்படுகின்றது.என மத்தியகிழக்கு செய்திகள் தெரிவிக்கின்றன.இம்மஸ்ஜிதானது பென்சில் வடிவில் அமைந்த நான்கு மினாராக்களைக் கொண்டுள்ளது.துருக்கியின் நீலப்பள்ளிவாசலின் வடிவிலேயே,இம் மஸ்ஜிதானது கட்டடப்பட்டுள்ளது. துருக்கியின் நீலப்பள்ளிவாசலானது,உஸ்மானிய கிலாபத்தின் ஆட்சியாராகஇருந்த சுல்தான் அஹ்மதின் காலத்தில்,1600ம் ஆண்டு கட்டப்பட்டது.
இப்பள்ளிவாசலுக்கு ,அல்பாரூக் மஸ்ஜித் என பெயரிடப்பட்டுள்ளது. கவர்ச்சியான தோற்றத்துடன்அமைக்கப்பட்டுள்ள இப்பள்ளிவாலானது, அதனை நாடிவரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் திறக்கப் படவுள்ளதுடன்,அவர்களுக்கு அங்குவந்து இஸ்லாத்தையும்,முஸ்லிம்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும் அறிந்துகொள்ளும் நோக்குடன் வாசிசகாலை,வகுப்பறைகள் மற்றும் கருத்தரங்குநலையம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.என அப்பள்ளிவாசலின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments