ஹிஸ்புல்லாஹ்வுக்கு இஸ்ரேலை தற்போது இலாகுவாகத் தோற்கடிக்க முடியும்.!






ஹிஸ்புல்லாஹ் அமைப்பானது மிகப்பலத்துடன் காணப்படுவதாகவும், 2006ம் ஆண்டு தென்லெபனானில்நடைபெற்ற யுத்தத்தில் இஸ்ரேலை தோல்வியடையச் செய்ததிலும் பார்க்க,பாரிய தோல்வியைத் தற்போது அடையச் செய்யமுடியும்.என ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தென்லெபனானின் பின்ட்ஜபீல் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரைநிகழ்த்திய ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஸையித் ஹாஷீம் ஸபியித்தீன் இதனைத் தெரிவித்தார். 2006ம்ஆண்டு தென்லெபனானில் ஸியோனிஸ தேசத்துக்கு எதிராக 33நாட்கள் நடைபெற்ற யுத்தத்தில் ஹிஸ்புல்லாஹ் இயக்கமானது,இஸ்ரேல்படையினை தென்லெபனான் எல்லையிலிருந்து விரட்டியடித்ததுடன்,இஸ்ரேலைத் தோல்வியடையச் செய்ததை,அவர் இதன் போது நினைவுகூர்ந்தார். 




2006ம் ஆண்டு நடைபெற்ற இவ்யுத்தத்தின் போது,1200 லெபனான் பொதுமக்கள் இஸ்ரேலியப்படைகளால்கொல்லப்பட்டனர்.இஸ்ரேலிய விமாணங்கள் லெபனான் வான்பரப்பு எல்லையை மீறி,லெபனான் வான்பரப்பில்ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. லெபனானின் வான்பரப்பில் இஸ்ரேலிய விமாணங்கள்ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதை ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் அரசாங்கம் என்பன முற்றாகக் கண்டித்துள்ளதுடன்,மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளை இஸ்ரேல் மீறுவதாகவும் மற்றும் தமது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும் தெரிவித்துள்ளன. லெபனானில் புதியஅரசாங்கமொன்றைத் தோற்றுவிப்பதற்காக அமெரிக்கா மற்றும் மேற்குநாடுகள் முயற்சி செய்வதாகவும்,தமது உரையில் ஸையித் ஹாஷிம் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments